சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் – அதிரடியாக குறைந்த தங்க விலை!

0
சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் - அதிரடியாக குறைந்த தங்க விலை!
சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் - அதிரடியாக குறைந்த தங்க விலை!
சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் – அதிரடியாக குறைந்த தங்க விலை!

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தை வாங்க ஏராளமானோர் ஆர்வம் கொள்கின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தங்கத்தின் மீது பெரும்பாலானோர் முதலீடு செய்ய ஆரம்பித்து வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டவர்களும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஆதலால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொடுகிறது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சற்று தங்கம் விலை சரிந்துள்ளது. மேலும் கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. இதனால் இந்த வாரமும் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நகைப்பிரியர்கள் இப்போது தங்கம் வாங்குவது உகந்ததாக இருக்கும். இன்றைய தங்கத்தின் விலை
கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி? அமைச்சர் விளக்கம்!

இதே போல் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.6110க்கு விற்பனையாகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை பணவீக்கம், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை குறையும் போது சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!