பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் – தப்பிப்பது எப்படி? புகார் தெரிவிக்கும் எண் இது தான்!

0
பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் - தப்பிப்பது எப்படி? புகார் தெரிவிக்கும் எண் இது தான்!
பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் - தப்பிப்பது எப்படி? புகார் தெரிவிக்கும் எண் இது தான்!
பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் – தப்பிப்பது எப்படி? புகார் தெரிவிக்கும் எண் இது தான்!

ஆன்லைன் வழியான மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது. இது போன்ற ஆன்லைன் ஹேக்கர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்ணையும் அழைக்கலாம்.

ஆன்லைன் மோசடிகள்

தற்போது ஆன்லைன் வழியாகவே பல்வேறு மோசடிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் மூலமான சேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பண மோசடிகளும் அதிகரித்து வருகிறது. படித்தவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி பல லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதாவது உங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏதேனும் இணையதள முகவரியை அனுப்பி அதன் மூலமாக எளிதில் உங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடிவிடுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் இது போன்ற குறுந்செய்திகளை யாரும் நம்பி ஏமாந்துவிட வேண்டாம். மேலும், சந்தேகப்படும்படியான ஏதெனும் குறுஞ்செய்திகள் உங்களது எண்ணிற்கு வந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். பண மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு நுகர்வோர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் வழியாக நீங்கள் மிக பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்றால் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையை அணுக வேண்டும்.

தமிழக கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு – 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? வெளியான தகவல்!

ஆன்லைன் வழியாக நாடாகும் மோசடிகளை தடுப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசடிகளில் சிக்கிக்கொண்டு பணத்தை இழந்தவர்கள் 155260 என்கிற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பணத்தை இழந்தவர்களின் புகார்கள் பெறப்பட்டதுமே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணம் திருப்பி வழங்கப்படுகிறது. புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே மோசடி செய்யப்பட்டவர்களுக்கு ஒப்புகை எண் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து வேலைகளையும் சைபர் காவல்துறை பார்த்துக்கொள்ளும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here