ஜூன் 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

0
ஜூன் 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு - இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஜூன் 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு - இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஜூன் 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

ஜூன் 20ம் தேதி அடிமைகள் ஒழிப்பை நினைவு கூறும் விதமாக பொது விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பினை அரசு அறிவித்துள்ளது.

பொது விடுமுறை

அமெரிக்காவில் அடிமைகளின் விடுதலையை நினைவு கூறும் விதமாக ஜூன் 19ம் தேதியன்று “ஜூன்டீன்த்” என்ற நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன்டீன்த் நினைவு தினம் ஜூன் 19ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை வருவதால், இந்த கூட்டாட்சி விடுமுறை ஜூன் 20 அன்று அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன்டீன்த் விடுமுறையை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பெடரல் அலுவலகங்கள், மாநில மற்றும் உள்ளூர் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற வணிகங்கள் அனைத்தும் மூடப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதே போல ஜூன் 20ம் தேதியன்று அமெரிக்க தபால் அலுவலகங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவை போல அலபாமாவிலும் இந்த நாள் அரசு விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூன்டீன்த் என்பது, அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் கடைசி அத்தியாயம் ஒழிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வு ஜூன் 19, 1865 அன்று டெக்சாஸில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் அறிமுகம்!

இப்போது ஜூன்டீன்த் தினத்தை முன்னிட்டு ஜூன் 20ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு தற்சமயம் வெளியாகியுள்ளது. இது தவிர 2022ம் ஆண்டில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டாட்சி விடுமுறைகள் குறித்த பட்டியலையும் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்,

  • ஜூன்டீன்த் – ஜூன் 20
  • சுதந்திர தினம் – ஜூலை 4
  • தொழிலாளர் தினம் – செப்டம்பர் 5
  • கொலம்பஸ் தினம் – அக்டோபர் 10
  • படைவீரர் தினம் – நவம்பர் 11
  • நன்றி கூறும் நிகழ்வு – நவம்பர் 24
  • கிறிஸ்துமஸ் தினம் – டிசம்பர் 26

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!