என்னுடைய ‘Weakness’ இது தான் – ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆலியா மானசா! வைரலாகும் பதிவு!

0
என்னுடைய 'Weakness' இது தான் - ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆலியா மானசா! வைரலாகும் பதிவு!
என்னுடைய 'Weakness' இது தான் - ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆலியா மானசா! வைரலாகும் பதிவு!
என்னுடைய ‘Weakness’ இது தான் – ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆலியா மானசா! வைரலாகும் பதிவு!

ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமான ஆலியாவிடம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கேள்வி கேட்டுள்ளனர். அதாவது உங்களுடைய Weakness என்ன என்றும், Strength என்ன என்றும் கேட்டுள்ளனர். அதற்கு ஆலியா பதில் கூறும் படியான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா:

தனது 17 வயதில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாடலிங் துறையின் மீது உள்ள ஆசையால் மாடலிங் துறையில் கால் பதித்தவர் தான் ஆலியா. மாடலிங் துரையின் மூலமாகவே ஆலியாவிற்கு சீரியல் வாய்ப்புகளும், படவாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. அதன் மூலமாகத்தான் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். அதாவது இந்த தொடரில் வீட்டு வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். சீரியலில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே ரசிகர்களின் எக்கச்சக்கமான ஆதரவை பெற்றார்.

Exams Daily Mobile App Download

ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அதே சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ்வை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார். கல்லூரியில் பாதியிலேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் இறங்கி விட்டார். ராஜா ராணி சீரியலை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். பிரசவத்திற்காக ராஜா ராணி சீசன் 2 தொடரில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதற்காக ராஜா ராணி சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை எனவும் கூறியிருக்கிறார்.

முதன்முறையாக விமானத்தில் தனது கணவருடன் சென்ற பூரிப்பில் தாமரைச்செல்வி – வைரலாகும் வீடியோ!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை கூறும் படியான ஒரு பதிவு ஒன்றை ஆலியா வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு இருந்தனர். அதாவது பத்தாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண், பன்னிரண்டாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் என பல கேள்விகள் கேட்டுள்ளனர். அனைத்து கேள்விக்கும் ஆலியா பதில் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் உங்களுடைய வீக்னஸ் என்ன என்றும், Strength என்ன என்றும் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு ஆலியா என்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் hurt செய்ய மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் எனக்கு பல மொழிகள் தெரியும். ஆனால் எனக்கு இதுவரை Grammar mistake இல்லாமல் சரியாக தெரியாது, அதுதான் என்னுடைய வீக்னஸ் எனக்கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here