மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் DA உயர்வு இருக்காது? AICPI தரவு சொல்வது இதுதான்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் DA உயர்வு இருக்காது? AICPI தரவு சொல்வது இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் DA உயர்வு இருக்காது? AICPI தரவு சொல்வது இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் DA உயர்வு இருக்காது? AICPI தரவு சொல்வது இதுதான்!

வரும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து இருந்த மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் அகவிலைப்படி உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று AICPI தரவுகள் கூறுகிறது.

அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு பரிசாக வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31% லிருந்து 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனுடன் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கும் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜூலை மாதத்தில் டிஏ உயர்த்தப்படும் என ஊழியர்கள் காத்திருக்கின்றனர். பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இதில் முதல் திருத்தம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் வழங்கப்படும். இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி தொகை மார்ச் மாதத்தில் 34% ஆக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலையில் மீண்டும் ஒருமுறை DA மாற்றப்படும். இதற்கிடையில், அகவிலைப்படிக்கான புள்ளிவிவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை கொடுக்கப்பட்ட தரவுகளின்படி, அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு வந்துவிட்டது.

மீண்டும் தொழிலை தொடங்கிய பாக்கியா, பாக்கியாவிடம் பேசியதை நினைத்து வருத்தப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

இவை டிசம்பர் 2021க்கு எதிராக சரிவைக் காட்டுகின்றன. அந்த வகையில் டிசம்பர் 2021 இல் AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. அடுத்து, 2022 ஜனவரியில் 0.3 புள்ளிகள் சரிந்து 125.1 ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரியில் 0.1 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தால், டிஏ உயர்வு இருக்காது. இப்போது DA 124க்குக் கீழே குறைந்தாலும், அதை நிலையாக வைத்துக் கொள்ளலாம். இதனால் DA உயர்வுக்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here