திருவள்ளுவர் பல்கலை PG மாணவர் சேர்க்கை 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
திருவள்ளுவர் பல்கலை PG மாணவர் சேர்க்கை 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருவள்ளுவர் பல்கலை PG மாணவர் சேர்க்கை 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருவள்ளுவர் பல்கலை PG மாணவர் சேர்க்கை 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூரவ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் ஆண்டு முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த கல்வியாண்டு கால தாமதமாக தொடங்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், விலங்கியல், வேதியியல், கணிதம், உயிரி தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், இயற்பியல் போன்ற பிரிவுகளில் முதுகலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.200, SC/ ST மாணவர்களுக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விண்ணப் படிவங்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tuv.edu.in மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!

மேலும் இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் இளங்கலை படிப்பில் 5 பருவத்தேர்வு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். SC/ST மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவுகளில் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இடங்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை www.tuv.edu.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!