திருத்தணி முருகன் கோவிலில் 50 காலிப்பணியிடங்கள் – இதுவரை 2,500 பேர் விண்ணப்பம்!

0
திருத்தணி முருகன் கோவிலில் 50 காலிப்பணியிடங்கள் - இதுவரை 2,500 பேர் விண்ணப்பம்!
திருத்தணி முருகன் கோவிலில் 50 காலிப்பணியிடங்கள் - இதுவரை 2,500 பேர் விண்ணப்பம்!
திருத்தணி முருகன் கோவிலில் 50 காலிப்பணியிடங்கள் – இதுவரை 2,500 பேர் விண்ணப்பம்!

திருத்தணி முருகன் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓட்டுனர், தொழில்நுட்ப அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக 50 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 2,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கோவில் பணி:

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களை திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவில்களில் தற்போது மீண்டுமாக தரிசனம் துவங்கி உள்ளது. இந்நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இந்த காலிப்பணியிடங்களுக்கு கடந்த மூன்று நாட்களில் சுமார் 2,500 பேர் விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!!

அதாவது திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள துணை கோவில்களில் தொழில்நுட்ப அலுவலர், ஓட்டுனர், அர்ச்சகர்கள், மேளம், தாளம் உட்பட்ட பணிகளில் 50 காலியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 13 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி ஆதார் அட்டையுடன் வரும் நபர்களுக்கு, 100 ரூபாய்க்கான விண்ணப்ப படிவங்கள் கோவில் தலைமை அலுவலகத்தில் வைத்து கடந்த 3 நாட்களாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் – விண்ணப்பிக்கும் விவரங்களுடன் …!

இந்த விண்ணப்ப படிவங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 2,500 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். மேலும் இவை வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வாங்கும் நபர்கள் தினசரி அதிகாலை 6 மணிக்கே கோவில் தலைமை அலுவலகத்தில் வந்து காத்திருந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here