திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு - தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு - தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!

சென்னை டூ திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய முதல் கட்டமாக 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தேசிய நெடுஞ்சாலை:

நாட்டின் சாலை போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி மக்களவை பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2022 – 2023 ம் ஆண்டில் 25,000 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருந்தாா். மேலும் சாலை கட்டுமான பணிகளின் வேகமும் துரிதப்படுத்தப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள சாலைகள் பெரிய சாலைகளாகவும், வலிமையான சாலைகளாகவும் மாற்றப்படும் என்று நெடுஞ்சாலை செயலாளர் கிரிதர் அரமனே தெரிந்துள்ளார்.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் வலைப்பயிற்சியில் MS தோனி!

அதனை தற்போது சென்னை – திருப்பதி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டும். விபத்துகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம் நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளையும், அதனை தேவைக்கேற்ப விரிவு செய்யும் பணிகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையம் சென்னை பாடி முதல் திருப்பாச்சூர் வரை இச்சாலையை விரிவாக்கம் செய்து, திருவள்ளூர் புறவழிச்சாலை வரை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

அரசுத்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த திட்டத்தை 5 ஆண்டுகளாக நடைமுறை படுத்த முடியாமல் இருந்து வந்தது. தற்போது திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ருநின்றவூர் முதல் திருப்பாச்சூர் வரை, 20 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here