சன் டிவியில் புதிய சீரியலில் கமிட்டான மெட்டி ஒலி “திருமுருகன்” – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவியில் புதிய சீரியலில் கமிட்டான மெட்டி ஒலி
சன் டிவியில் புதிய சீரியலில் கமிட்டான மெட்டி ஒலி "திருமுருகன்" - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் புதிய சீரியலில் கமிட்டான மெட்டி ஒலி “திருமுருகன்” – ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் பல வெற்றி சீரியல்களை கொடுத்த பெருமைக்கு உரியவரான இயக்குனர் திருமுருகன், நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சன் டிவியில் புதிய சீரியல் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த சீரியலுக்கான ஆடிசன் தற்போது நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் திருமுருகன்:

90’ஸ் கிட்ஸ் காலத்தில் இளசுகள் முதல் பெருசுகள் வரை சீரியல்களை விரும்பி பார்க்க வைத்த பெருமை இயக்குனர் திருமுருகனை சேரும். அவர் சன் டிவியில் இயக்கிய சீரியல்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அவருடைய சீரியல் என்றாலே அதில் நிஜ குடும்பக் கதைகளும் பெண்களை உயர்வாக காட்டப்படும் காட்சிகளும் இருக்கும். அதனால் அந்த சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது. மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு, குல தெய்வம் என பல சீரியல்கள் அவருடைய படைப்பில் வெளிவந்துள்ளன.

Exams Daily Mobile App Download

அதில் நாதஸ்வரம் சீரியலில் அவரும் ஒரு கதாபாத்திரமாக மாறி நடித்ததன் மூலம் அவருடைய சொந்த பெயரை மறந்து கதாபாத்திரத்தின் பெயர் அவருக்கு அடையாளமானது. தற்போது கால மாற்றத்திற்கு ஏற்றார் போல பல சீரியல்கள் வந்தாலும் திருமுருகன் போல சீரியல் எடுக்க முடியாது என்ற பெருமை இன்னும் நீங்காமல் இருக்கிறது. அவர் சீரியல் மட்டுமல்லாமல் எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களையும் எடுத்தார்.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

எம்டன் மகன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின் சீரியல் சினிமா என இரண்டிலும் இடைவெளி எடுத்துக் கொண்ட திருமுருகன், தற்போது மீண்டும் சன் டிவி உடன் கை கோர்த்து இருக்கிறார். அவர் விரைவில் புதிய சீரியலை இயக்க இருக்கிறார். அதற்கான ஆடிசன் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் கதை எது பற்றியது, அதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகை யார் என்பதை பற்றி எல்லாம் விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here