பல வருடம் கழித்து மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் ‘திருமதி செல்வம்’ அர்ச்சனா – ரசிகர்கள் உற்சாகம்!

0
பல வருடம் கழித்து மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் 'திருமதி செல்வம்' அர்ச்சனா - ரசிகர்கள் உற்சாகம்!
பல வருடம் கழித்து மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் 'திருமதி செல்வம்' அர்ச்சனா - ரசிகர்கள் உற்சாகம்!
பல வருடம் கழித்து மீண்டும் சீரியலில் அறிமுகமாகும் ‘திருமதி செல்வம்’ அர்ச்சனா – ரசிகர்கள் உற்சாகம்!

திருமதி செல்வம் சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான ஆதரவை பெற்ற அபிதா பல ஆண்டுகளாக சீரியலில் இருந்து விலகியே இருந்தார். தற்போது மீண்டும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சனா:

விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தொலைக்காட்சி முதலிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தான் மக்கள் அதிகமாக பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது என்னதான் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் 90’ஸ் காலகட்டத்தில் ஒளிபரப்பப்பட்ட சீரியலுக்கு ஈடாக முடியாது. அந்த அளவுக்கு சித்தி, தென்றல், திருமதி செல்வம், கோலங்கள், மெட்டி ஒலி போன்ற மெகா தொடர்கள் ரசிகர்களின் அதிகமான ஆதரவை இன்றும் பெற்று வருகிறது. அதிலும் இந்த திருமதி செல்வம் தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் ஒளிபரப்பாகி அனைத்து மொழிகளிலும் நல்ல ரீச்சை பெற்றது.

பாக்கியாவை வீட்டை விட்டு அடித்து விரட்டும் கோபி – சீரியலில் புதிய திருப்பம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழில் திருமதி செல்வம் தொடரில் செல்வம் கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும், அர்ச்சனா கதாபாத்திரத்தில் அபிதாவும் நடித்து இருந்தார்கள். இருவரின் நடிப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. டிஆர்பியிலும் திருமதி செல்வம் தொடர் தான் முன்னிலையில் இருந்து வந்தது. இந்த சீரியலுக்கு பிறகு அபிதாவுக்கு தங்கமான புருஷன் என்கிற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலமாகவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

Exams Daily Mobile App Download

முன்னதாக சேது திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்திருந்தார். இதன் பின்பு கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நட்பே துணை திரைப்படத்திலும் நடிகை கௌசல்யா கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படத்தில் எதிர்பாராதவிதமாக நடிக்க இயலவில்லை. பல ஆண்டுகளாகவே சீரியலில் இருந்து விலகியே இருந்த அபிதா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சீரியல் அபிதாவை பார்க்க இருக்கும் குஷியில் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!