பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் ‘திருமதி செல்வம்’ சஞ்சீவ் – விலகும் அருண்? உண்மை நிலவரம் என்ன?

0
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் 'திருமதி செல்வம்' சஞ்சீவ் - விலகும் அருண்? உண்மை நிலவரம் என்ன?
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் 'திருமதி செல்வம்' சஞ்சீவ் - விலகும் அருண்? உண்மை நிலவரம் என்ன?
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் ‘திருமதி செல்வம்’ சஞ்சீவ் – விலகும் அருண்? உண்மை நிலவரம் என்ன?

பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு கண்ணம்மாவை அனைவருமே வெறுத்து ஒதுக்கினர். அப்போது பாரதி தான் கண்ணம்மாவை விரும்பி திருமணம் செய்துகொண்டார். கண்ணம்மாவிற்கு ஆதரவாக பாரதியும் கண்ணம்மாவின் அப்பா மட்டுமே இருந்து வந்தனர். பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்தது பாரதியின் குடும்பத்தில் உள்ள யாருக்குமே பிடிக்கவில்லை.

குழந்தை இல்லாததால் கதிர் எடுக்கும் திடீர் முடிவு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பின்பு, குடும்பத்தில் உள்ள அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணம்மாவை ஏற்று கொள்கின்றனர். கண்ணம்மா கர்ப்பமானதும் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் வருகிறது. இது என்னுடைய குழந்தையே இல்லை என சொல்லி கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்துகிறார். கண்ணம்மாவும் தன் மீது தவறு இல்லாத போது நாம் ஏன் மற்றவருக்கு பணிந்து போக வேண்டும் என கஷ்டத்திலும் குழந்தையை நன்றாக வளர்த்து வந்தார். கண்ணம்மா பெற்ற ஒரு குழந்தையை பாரதி தான் வளர்த்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

10 ஆண்டுகளில் ஒரு முறை கூட கண்ணம்மாவை வெறுக்காமல் இல்லை. கண்ணம்மாவை விட்டு விலகி போக வேண்டும் என நினைக்கிறார். தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் இருவரும் சேர அதிக வாய்ப்பிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்களா என எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதில் திருமதி செல்வம் சீரியலின் மூலமாக பிரபலமான சஞ்சீவ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருண் சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!