தமிழகத்தில் புதிய திட்டங்கள் குறித்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் – முதல்வர் விவாதம்!

0
தமிழகத்தில் புதிய திட்டங்கள் குறித்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் - முதல்வர் விவாதம்!
தமிழகத்தில் புதிய திட்டங்கள் குறித்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் - முதல்வர் விவாதம்!
தமிழகத்தில் புதிய திட்டங்கள் குறித்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் – முதல்வர் விவாதம்!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டங்கள் குறித்து முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் முதல்வர் விவாதம் நடத்தினார். அதில் இந்த ஆண்டுக்கான வரவு செலவு குறித்து விவாதம் செய்யப்பட்டது.

பொருளாதார ஆலோசனை

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதம் மேற்கொண்டார். அதன் பின் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், முதல்வருக்கான பொருளாதாரா ஆலோசனை குழு அரசின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, சமூக நீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து மாநிலத்தின் மொத்த நிதிநிலைமையை பாதுகாக்க ஆலோசனை வழங்கும் மையமாக இந்த குழு இருக்கிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான ஆலோசனை குழு முதல் கூட்டம் 9.7.2021 அன்றும், இரண்டாவது கூட்டம் 25.01.2021 அன்றும் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் மூன்றாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்ந்து பணி செய்து ஆலோசனை வழங்கி வரும் இந்த குழுவிற்கு நன்றி தெரிவித்து, இந்த குழு வழங்கிய ஆலோசனைகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் நிதி மேலாண்மைக்கும் முக்கியமானவை என முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!