தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ ஓய்வூதியம் கிடையாது – அதிரடி நடவடிக்கை!

0
தமிழகத்தில் 'இவர்களுக்கு' ஓய்வூதியம் கிடையாது - அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் 'இவர்களுக்கு' ஓய்வூதியம் கிடையாது - அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ ஓய்வூதியம் கிடையாது – அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு அமைச்சகம் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்களில் தற்போது இறந்து போன ஓய்வூதியதரர்களை அரசு நீக்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஓய்வூதியம் பெற தகுதியற்றோர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்:

தமிழகத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், இலங்கை அகதிகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என லட்சக்கணக்கானோர் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், சமூக பாதுகாப்பு பென்ஷன் பெற்று வந்த ஓய்வூதியதாரர்களில் இறந்துபோன 1.73 லட்சம் பேரை அரசு நீக்கியுள்ளது. மத்திய, மாநில அரசு பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் மதிப்பெண்கள் எவ்வளவு? முழு விபரம் இதோ!

இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனையடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமும் உறுதி செய்யப்படும். ஆனால் சமூக பாதுகாப்பு பென்சன் வாங்குவோரிடம் வாழ்நாள் சான்றிதழ் கேட்கப்படுவதில்லை. அதனால் ஓய்வூதியம் பெறும் நபர்கள் இறந்தால் அரசுக்கு தெரிவதில்லை. அதனை முறையாக கண்டுபிடித்து தற்போது அரசு இறந்தவர்களுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகையினை நிறுத்தி வைத்துள்ளது.

அதனை தொடர்ந்து மேலும் தகுதி இல்லாத 18,656 பேரின் விவரங்களை அரசு ஆய்வு செய்து வருகிறது. இதற்கான ஓய்வூதியம் பெறுபவர்களின் ஆதார் அட்டை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மூக பாதுகாப்புத் பதிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்து வருகிறது. தற்போது தகுதியில்லாத 18,656 நபர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டால் அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் செலவினம் சேமிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!