தமிழகத்தில் இத்தனை ஏரியாக்களில் நாளை (செப். 29) மின்தடை – முழு விவரம் இதோ!
தேனி மாவட்டம் வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய 3 துணை மின் நிலையங்களிலும் நாளை (செப். 29) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் நோக்கிலும், பாதுகாப்பான தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழையின் போது மின் வயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்து மின் விபத்தைகள் ஏற்படுகிறது. இது போன்ற விபரீத நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது. மேலும் உறுதியான வயர்கள், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ( செப்.29) தேனி மாவட்டத்தில் உள்ள ராசிங்காபுரம், வைகை அணை, வீரபாண்டி ஆகிய 3 துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் சடையால் பட்டி, சூலப்புரம், டி.ரங்கநாதபுரம், மாணிக்காபுரம், பொட்டிப்புரம், டொம்புச்சேரி, போடேந்திரபுரம், வீரபாண்டி,சில்லமரத்துப்பட்டி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் செப். 29-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் தலையீட்டிற்கு பிறகும் உச்ச விலை நிர்ணயிக்கும் ஆம்னி பஸ்கள் – குமுறும் பயணிகள்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து வைகை அணை பகுதி துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர் ,வைகை அணை, குள்ளப்புரம், மருகால்பட்டி, வைகை புதூர் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின் பயனர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்