மீண்டும் ரோஜா சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம் – அப்போ எதோ சம்பவம் இருக்கு!!

0
மீண்டும் ரோஜா சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம் - அப்போ எதோ சம்பவம் இருக்கு!!
மீண்டும் ரோஜா சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம் - அப்போ எதோ சம்பவம் இருக்கு!!
மீண்டும் ரோஜா சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம் – அப்போ எதோ சம்பவம் இருக்கு!!

ரோஜா சீரியலில் தற்போது பரபரப்பான பல கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இத்தனை நாட்கள் ப்ரியா வீட்டையே நம்ப வைத்து ஏமாற்றியதெல்லாம் வெளிவரப்போகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

ரோஜா சீரியல்:

ரோஜா சீரியல் தொடர்த்து டிஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதனை தக்கவைப்பதற்காகவே பல விறுவிறுப்பான காட்சிகள் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. ரோஜா தான் மாணிக்கத்தின் மகள் என்பதை நிரூபிக்க பல வேலைகளை செய்து வந்தார் அர்ஜுன். ஆனால் அதையெல்லாம் பிரியா தனது தோழியின் உதவியுடன் ஆதாரத்தை கலைத்து விட்டார்.

TN Job “FB  Group” Join Now

ssc

டைகர் மோகனும் எந்த உண்மையையும் நம்புவதாக இல்லை. பிரியா சொன்னது தான் வேதவாக்கு என்று நம்பி வருகிறார். சன் டிவி சீரியல்களை பொறுத்தமட்டில் ரோஜா சீரியல் தான் டாப் ஹிட். அர்ஜூனுக்கும், ரோஜாவிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதுவும் இந்த சீரியலுக்கு ஒரு பிளஸ் தான். எப்பொழுது உண்மை தெரியவர போகிறது என பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

நகைக்கடன் வாங்குவோர் கவனத்திற்கு – வங்கிகளின் வட்டி விகிதம்!!!

மேலும் அர்ஜுன் கோர்ட்டில் கேட்ட கேள்விக்கு பிரியா அனைத்தையும் உளறியும் விட்டார். ஆனாலும் டைகர் மாணிக்கத்திற்கு பிரியா மீது இருக்கும் நம்பிக்கை போகவே இல்லை. இப்படி சீரியலை சவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போனாலும் சுவாரசியம் குறையாமல் தான் ஓடிக்கொண்டுள்ளது.

இப்படி இருக்க தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திராத்தில் நடித்தவர் மீண்டும் களமிறங்கியுள்ளார். இவரை வைத்து சீரியலில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ராஜபார்வை சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!