சென்னை பெட்ரோல் & டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை – மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
சென்னை பெட்ரோல் & டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை - மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!
சென்னை பெட்ரோல் & டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை - மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!
சென்னை பெட்ரோல் & டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை – மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சென்னையில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும்.  இந்த விலை மாற்றமானது உலகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு தகுந்தவாறு நிர்ணயம் செய்யப்படுகிறது.  அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றி பார்ப்போம்.

பெட்ரோல் & டீசல் விலை

இந்தியாவில் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படவில்லை.  அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இறக்குமதி செய்வதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.  இதனால் எண்ணெய்க்கான தேவை, இறக்குமதி கட்டணம், ஏற்றுமதி கட்டணம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் & டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேலும் தற்போது நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெட்ரோலின் தேவையும் அதிகரித்து கொண்டே வருகிறது.  மேலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மக்கள் தொகை உயர்வது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  இதையடுத்து மத்திய அரசு விதிக்கும் பல்வேறு வகையான வரிகளுக்கேற்ப இந்தியன் ஆயில் கம்பெனி உள்ளிட்ட முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் சேர்ந்து பெட்ரோலுக்கான புதிய விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன.  அத்துடன் மாநிலங்களில் இருக்கும் வெவ்வேறு மாநகரங்களில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் கட்டணங்களுக்கு ஏற்றவாறு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழக 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு – அரசின் முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

இதையடுத்து கடந்த 11ம் தேதி அன்று பெட்ரோல் விலை 10 பைசா குறைந்து ரூ.102.63க்கு விற்பனை செய்யப்பட்டது.  பொதுவாக பெட்ரோல் விலை, பைசா அடிப்படையில் தான் மாற்றமடையும்.  ஆனால் வாகனத்திற்கு அதிக அளவு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்பதால் மொத்த தொகையில் அதிக மாற்றம் இருக்கும்.  இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பெட்ரோல் & டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.  இதே போல் இன்றும் பெட்ரோல் & டீசல் விலை எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!