தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

பிரிட்டனில் பரவி வரும் மற்றொரு உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு வாய்ப்பில்லை:

கொரோனா நோய் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் போடப்பட்டது. பின் தளர்வுகளின் அடிப்படையில் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படுமா என்ற அச்சம் அனைவரின் மனதிலும் உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அரசு துறைகளில் பட்டியலின காலிப்பணியிடங்கள் குறித்த வழக்கு – தமிழக அரசிற்கு நோட்டீஸ்!!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், தமிழக புற்றுநோய் திட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கடந்த வாரம் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அவர்களில் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இருப்பது உருமாறிய கொரோனா தொற்றா? என்பது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டினுள் உள்ளது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு வர வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார்.

பட்டப்படிப்பு தேவையில்லை! கூகிள், ஆப்பிள் நிறுவனங்களில் வேலை – ஆய்வில் தகவல்!!

தொடர்ந்து புற்றுநோய் குறித்து பேசிய அவர், ஆண்களை விட பெண்கள் தான் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆண்களை பொறுத்தவரை இரைப்பை புற்று நோயால் 6.6 சதவிகிதம் பேரும், நுரையீரல் புற்றுநோயால் 5.9 சதவிகிதம் பேரும், வாய் புற்றுநோயால் 6.2 சதவிகிதம் பெரும் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களை பொறுத்தவரை மார்பக புற்றுநோயால் 24.7 சதவிகிதமும், கருப்பை புற்றுநோயால் 19.4 சதவிகிதம் பேரும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!