‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த கதைக்களம் இதுதான்!

0
'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த கதைக்களம் இதுதான்!
'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த கதைக்களம் இதுதான்!
‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த கதைக்களம் இதுதான்!

தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபியும் வெற்றியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் படியான காட்சிகள் தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடர் லவ் ட்ராக்கில் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

தென்றல் வந்து என்னைத் தொடும்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பவித்ரா மற்றும் வினோத் இருவரின் ஜோடியும் ரசிகர்களால் அதிகம் ரசிக்க வைத்து வருகிறது. தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் தான் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. அபி மற்றும் வெற்றியின் திருமணம் எதிர்பாராத நேரத்தில் நடந்திருந்தாலும் கூட இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

கோபி வேறொருவரை காதலிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்!

வெற்றிதான் எனது கழுத்தில் தாலி கட்டினார் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் எதிர்த்து வெற்றியை திருத்தி அவனுடன் சேர்ந்து வாழ்வேன் என வெற்றியின் வீட்டிற்கு அபி வந்தார். தற்போது வெற்றியை போலீசார் சுட்ட நிலையில் வெற்றியை காப்பாற்றி அபி தான் தன்னுடைய வீட்டில் தங்க வைத்து இருக்கிறார். தற்போது பூங்காவனத்தை போலீசார் கைது செய்து வைத்திருக்கின்றனர். அடுத்ததாக வெற்றியையும் கைது செய்ய வேண்டும் என போலீஸார் துடித்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றியை கையும் களவுமாக பிடித்து என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

என்னதான் அபி மீது வெற்றிக்கு கோபம் இருந்தாலும் கூட வெற்றியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதால் கொஞ்சம் கொஞ்சமாக அபியை பற்றி புரிந்து கொள்ளும் படியாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் வெற்றியை அபி புருஷ் என்று அழைக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்க தக்க வகையாக இருந்து வருகிறது. தற்போது அபியும் வெற்றியும் காதலிப்பது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப சீரியல் குழுவினர்கள் முடிவெடுத்துள்ளனர். இருவரின் காதல் காட்சிகளும் ஒளிபரப்பப்பட இருக்கும் நிலையில் சூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!