கர்ப்பமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – லேட்டஸ்ட் அப்டேட்!

0
கர்ப்பமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - லேட்டஸ்ட் அப்டேட்!
கர்ப்பமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - லேட்டஸ்ட் அப்டேட்!
கர்ப்பமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடந்த சில வாரங்களாக மிகவும் சோகமான காட்சிகள் வந்த நிலையில், இனி வரும் வாரம் மகிழ்ச்சியான எபிசோடுகள் தான் வர உள்ளது.

சஸ்பென்ஸ் எபிசோட்:

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கடந்த வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் ஹீரோவாக வெற்றி கதாபாத்திரத்தில் வினோத் பாபுவும், ஹீரோயினாக பவித்ரா ஜனனி, அபி கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இவர்களை தவிர பல முக்கிய நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்து வருகின்றனர். தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ப்ரோமோ வெளியான சமயத்தில் இருந்து பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தது.

Follow our Instagram for more Latest Updates

வெளிநாட்டில் படித்த அபி, பாரம்பரியத்தை முழுமையாக நம்புகிறார். ரவுடித்தனம் செய்து வரும் வெற்றி பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை அற்றவராக இருப்பார். இவர்கள் இருவரும் பல திருப்பங்களுக்கு மத்தியில் திருமணம் செய்து, சண்டை, சச்சரவுகளோடு இருந்து வருகின்றனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவரும் பரஸ்பரமாக புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது விதியின் சதியால் பிரிந்து விடுகின்றனர். இருவருக்கும் தனித்தனியாக வேறு நபர்களோடு திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பொம்மை டாஸ்கில் சகட்டு மேனிக்கு சண்டை போட்ட மகேஸ்வரி, தனலட்சுமி – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

அந்த திருமணத்தின் இறுதி நொடியில் இருவரும் மனதில் இருக்கும் கோவத்தை வெளியேற்றி விட்டு ஒற்றுமையாக வாழ ஆரம்பிக்கின்றனர். அப்போது பார்த்து வெற்றி போதை மருந்து கடத்தியதாக அபியின் நண்பரான போலீஸ் அதிகாரி அஷ்வின், வெற்றியை கைது செய்கிறார். அபி போராடி வெற்றி தவறு செய்யவில்லை என்று நிரூபித்து வெற்றியை மீட்கிறார். இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வரும் வாரம் அபி கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்றல் வந்து என்னை தொடும் ரசிகர்கள் பலரும் இந்த தருணத்திற்காக தான் காத்துகொண்டு இருந்தனர். தற்போது விரைவில் அது நடக்க உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!