தமிழகத்தில் செப்டம்பர் மாதம் தியேட்டர்கள் திறப்பு? திரையுலகினர் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு முன்னெடுத்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டு தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தியேட்டர்களில் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டாயம் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு 100% சம்பள உயர்வு – 10 வருட அனுபவத்திற்கு ரூ.60 லட்சம்!
மேலும் தமிழகம் தவிர அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தெலுங்கானாவில் 100 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியிலும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் தியேட்டர்கள் கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
TN Job “FB
Group” Join Now
தமிழகத்தில் பல முன்னணி படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டால், கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அரசு தியேட்டர்கள் திறப்பது குறித்த முடிவெடுப்பதில் தாமதம் செய்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்க உள்ள ஊரடங்கு தளர்வுகளில் தியேட்டர்கள் திறப்பது குறித்து அறிவிப்பு இருக்கும் என திரையுலகினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.