புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு – ரசிகர்களுக்கு ஆபர்!

0
புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு - ரசிகர்களுக்கு ஆபர்!
புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு - ரசிகர்களுக்கு ஆபர்!
புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு – ரசிகர்களுக்கு ஆபர்!

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 100 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் திரையரங்கில் உள்ள உணவகங்களில் உணவு பொருட்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

திரையரங்குகள் திறப்பு:

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த மாதம் முதல் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஊரடங்கால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அதே நேரத்தில் கடும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே கடைகளை இயக்க வேண்டும். அரசின் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது.

சென்னையில் ஆகஸ்ட் 7 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனை பின்பற்றி புதுச்சேரியில் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்க வேண்டும், உணவுகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதிக்க வேண்டும். இதனை ஆராய்ந்து அரசு கடைகள் செயல்படும் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதே போல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு பிறகு இன்று புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் திறக்கப்பட்டு அங்குள்ள கேன்டீன்களில் வாங்கும் உணவு பொருட்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர காட்சிகள் ஒளிபரப்புவது இல்லை. மேலும் திரையரங்குகளில் டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். சமூக இடைவெளியை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும் திரையரங்க ஊழியர்கள் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!