அக்.22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

0
அக்.22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
அக்.22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி - மாநில அரசு அறிவிப்பு!
அக்.22 முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையான கோவிட் -19 நெறிமுறைகளுடன் அக்டோபர் 22 முதல் மாநிலத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் சினிமா அரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

முதல்வர் அறிவிப்பு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று 3,286 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 65,37,843 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 1,38,776 ஆகவும் அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி அறிவித்துள்ளார். நேற்று மட்டும் 3,933 நோயாளிகள் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Reliance Jio வழங்கும் இலவச Disney + Hotstar சலுகை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இதனால் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,57,012 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் தற்போது 39,491 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து கோவிட் -19 பணிக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில், அக்டோபர் 7 முதல் மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக பக்தர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு ஒரு SOP ஐ வெளியிட்டது. மேலும், அக்டோபர் 4 முதல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

மேலும், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5 முதல் 12 வகுப்புகளும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 வகுப்புகளும் மீண்டும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார். நேற்று நேற்று நடத்த கூட்டத்தின் முடிவில், கோவிட் -19 தொடர்பான அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றினால், சினிமா அரங்குகள் மற்றும் தியேட்டர்கள் வரும் அக்டோபர் 22 முதல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!