ஜூன் 21 க்கு மேல் முழு ஊரடங்கில் கடைசி தளர்வுகள் – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

0
ஜூன் 21 க்கு மேல் முழு ஊரடங்கில் கடைசி தளர்வுகள் - இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
ஜூன் 21 க்கு மேல் முழு ஊரடங்கில் கடைசி தளர்வுகள் - இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
ஜூன் 21 க்கு மேல் முழு ஊரடங்கில் கடைசி தளர்வுகள் – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான இறுதி கட்டம் ஜூலை 19 வரை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊரடங்கு தளர்வுகளை அறிவிப்பது தொடர்பான ஆய்வு இன்னும் 2 வாரம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இவை தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

இங்கிலாந்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கடைசி கட்ட தளர்வுகளாக சமூக தொடர்புகள் மற்றும் மீதமுள்ள பெரும்பாலான தளர்வுகள் ஜூன் 21க்கு மேல் நீக்கப்பட உள்ளன. அதன் படி திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கான வரம்பு நீக்கப்படும். இந்த நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இங்கிலாந்தில் தளர்வுகளை அளிப்பது அவசியமில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தாஜ்மஹால் இன்று முதல் மீண்டும் திறப்பு – சுற்றுலா பயணிகள் ஆர்வம்!

ஆனால் பிரிட்டனில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிப்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘NHS மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், தளர்வுகள் அளிப்பதற்கு தாமதம் ஆகியுள்ளது என கூறியுள்ளார். மேலும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நோய் தொற்று கணக்கை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட தளர்வுகள் அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். இது தவிர இங்கிலாந்தில் 23 மற்றும் 24 வயதுடையவர்களுக்கு தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி – முதல்வர் துவக்கி வைப்பு!

அரசின் உத்தரவின் படி ஜூன் 21 முதல் அளிக்கப்படவுள்ள தளர்வுகளில்,

  • திருமணங்களில் இனி விருந்தினர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்படாது.
  • ஆனால் இந்த நிகழ்வுகளின் போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • உட்புற நடன தளங்கள், கலாச்சார நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது.
  • வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள் இனி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியதில்லை. மருத்துவமனையில் தங்கி வீடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம்.
  • 30 பேர் கொண்ட குழுக்கள் வெளியிலும், வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஆறு பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
  • தவிர இரவு விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அலுவலகங்களில் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!