விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலுக்கு வந்த சோதனை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'சிப்பிக்குள் முத்து' சீரியலுக்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'சிப்பிக்குள் முத்து' சீரியலுக்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலுக்கு வந்த சோதனை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிப்பிக்குள் முத்து சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது வில்லி இந்த சீரியலில் இருந்து விலகியதால் சீரியல் மிகவும் சரிவடையத் தொடங்கியுள்ளது.

சிப்பிக்குள் முத்து:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பியிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி என அனைத்து சீரியல்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட சிப்பிக்குள் முத்து சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது சாதாரணமான அக்கா, தங்கை பாசத்தை மையமாக கொண்டு இல்லாமல் சற்று வித்தியாசமாக தங்கை காதலித்தவனை திருமணம் செய்துகொள்வதற்காக அக்கா ஒரு மனவளர்ச்சி குன்றிய இளைஞனை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தியாகம் செய்வது போன்ற கதை தான் சிப்பிக்குள் முத்து. வித்தியாசமான கதைக்களம் என்பதால் மக்கள் அதிகமாக சிப்பிக்குள் முத்து சீரியலை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அதாவது, ஸ்டார் மா என்னும் தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் செல்லேலி காபுரம் என்னும் சீரியலின் ரீமேக்கை தான் சிப்பிக்குள் முத்து என்று தமிழில் ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கின்றனர்.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்!

பிரபல கன்னட சீரியல் நடிகரான ஜெய் டிசோசா சிப்பிக்குள் முத்து என்கிற சீரியல் மூலமாக தான் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த நிலானி திடீரென சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரிஹானா என்பவர் வில்லியாக சிப்பிக்குள் முத்து சீரியலில் அறிமுகமாகியுள்ளார். வில்லியாக நடித்தவர் சீரியலில் இருந்து விலகியதில் இருந்து சீரியல் சரிவடைய தொடங்கிவிட்டது. இதனை சரிக்கட்டும் முயற்சியில் சிப்பிக்குள் முத்து சீரியல் குழுக்கள் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!