மாநிலத்தில் சண்டே மார்க்கெட் செயல்படாது? புதுவை அரசு விளக்கம்!

0
மாநிலத்தில் சண்டே மார்க்கெட் செயல்படாது? புதுவை அரசு விளக்கம்!
மாநிலத்தில் சண்டே மார்க்கெட் செயல்படாது? புதுவை அரசு விளக்கம்!
மாநிலத்தில் சண்டே மார்க்கெட் செயல்படாது? புதுவை அரசு விளக்கம்!

புதுச்சேரியில் அரசின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெகு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வரவும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலை கடலில் கரைக்கப்படவுள்ளது. இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலம்:

இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. மேலும் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொற்று பரவல் குறைந்துள்ளதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பானா முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

எப்போதும் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிலைகள் வைக்கப்பட்டு மூன்றாம் நாள் அல்லது 5ம் நாள் அன்று சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்த வகையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்று வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கரைக்கப்பட உள்ளது. ஊர்வலமானது நேரு வீதி, காந்தி வீதி, அஜாந்தா சந்திப்பு, பட்டேல் சாலை வழியாக ஊர்வலம் நடைபெற உள்ளது. அதனால் விநாயகர் சிலை அப்பாதையில் பாதையில் சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக் கூடாது என்று புதுவை நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் திரையரங்கங்களில் டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே? அறிவிப்பு வெளியீடு!

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் போக்குவரத்து இடையூறு இன்றி இருக்க மகாத்மா காந்தி வீதியில் அஜந்தா சிக்னலில் இருந்து நேரு வீதி சந்திப்பு வரை உள்ள சண்டே மார்க்கெட் கடைகள் அனைத்தும் செயல்படக்கூடாது. மேற்கண்ட பகுதிகளில் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று வியாபாரம் நடத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக சிலைகளை கடல் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வசதியாக மண் கொட்டி சாய்தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!