விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ‘கயல்’ சீரியல் – இந்த வார TRP ரேட்டிங்!

0
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவி 'கயல்' சீரியல் - இந்த வார TRP ரேட்டிங்!
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவி 'கயல்' சீரியல் - இந்த வார TRP ரேட்டிங்!
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ‘கயல்’ சீரியல் – இந்த வார TRP ரேட்டிங்!

தமிழ் டிவி சேனல்களில் சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பான நூற்றுக்கணக்கான சீரியல்களில் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து சன் டிவியின் ‘கயல்’ சீரியல் முதலிடத்தை பெற்றுள்ளது. விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

TRP ரேட்டிங்

ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை அனைத்து டிவி சேனல்களிலும் இடை விடாது ஒளிபரப்பப்படுவது சீரியல்கள் மட்டும் தான். அந்த வகையில் தமிழ் மொழியில் மட்டும் தினசரி நூற்றுக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில குறிப்பிட்ட சீரியல்கள் மட்டுமே மக்களின் மனம் கவர்ந்ததாக இருந்து வருகிறது. அதுவும் சீரியல்களுக்கு பெயர் போன விஜய், சன், ஜீ தமிழ், கலர்ஸ் ஆகிய டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் TRP ரேட்டிங்கில் எப்போதும் டாப் இடத்தை பிடித்து வருகிறது.

PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

இப்படி இருக்க இந்த வாரம் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்து டாப் 28 இடத்தை பிடித்திருக்கும் சில சீரியல்களை குறித்து இப்பதிவில் காணலாம். அந்த வகையில் இப்பட்டியலில் முதலாவதாக சன் டிவியின் ‘கயல்’ சீரியல் 11.17 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் வெளியாகி வெறும் 40 எபிசோடுகளை மட்டுமே கடந்திருக்கும் நிலையில் இந்த சீரியல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதை தொடர்ந்து சன் டிவியின் ‘வானத்தை போல’ சீரியல் 10.62 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ‘சுந்தரி’ சீரியல் 10.48 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 10.28 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் 9.76 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. இந்த சீரியல்களை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில்,

 • பாக்கியலட்சுமி – 9.58
 • பாண்டியன் ஸ்டோர்ஸ் – 9.19
 • அபியும் நானும் – 9.13
 • கண்ணான கண்ணே – 8.90
 • அன்பே வா – 8.19
 • ராஜா ராணி 2 – 7.87
 • தமிழும் சரஸ்வதியும் – 6.31
 • நினைத்தாலே இனிக்கும் – 5.57
 • பூவே உனக்காக – 5.27
 • மௌனராகம் 2 – 5.21
 • கோகுலத்தில் சீதை – 4.58
 • புதுப்புது அர்த்தங்கள் – 4.44
 • பாண்டவர் இல்லம் – 4.31
 • சந்திரலேகா – 4.27
 • அருவி – 4.16
 • தாலாட்டு – 4.15
 • மெட்டி ஒலி -4.09
 • செம்பருத்தி – 4.06
 • அன்பே சிவம் – 3.66
 • நாம் இருவர் நமக்கு இருவர், சத்யா – 3.41
 • சித்தி 2- 2.99
 • தென்றல் வந்து என்னைத் தொடும் – 2.97
 • காற்றுக்கென்ன வேலி – 2.81 ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here