இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் குறைந்து வருவதால் மும்பை நகரில் இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்க இருப்பதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.
பேருந்து சேவைகள்:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் இருந்ததால் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. ஞாயிற்று கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் 12,557 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 14,433 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 233 பேர் தொற்றினால் பலியாகியுள்ளதாக மாநில பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மாநிலத்தின் உயிரிழப்பு விகிதம் 1.72% ஆக உள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் 1,85,527 கொரோனா நோயாளிகள் உள்ளனர். மாநிலத்தில் பாதிப்புகள் குறைந்துள்ளதால் ஊரடங்கில் 5 கட்ட தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் ஜூன் 15ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மாவட்டத்தில் உள்ள நிலைமையை பொறுத்து தளர்வுகளை அறிவிக்கவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாவட்ட அதிகாரிகள் முடி எடுக்க மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அனுமதி அளித்துள்ளார்.
சென்ட்ரல் பேங்க் & IOB வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்? நிதி ஆயோக் பரிந்துரை!
மும்பை நகரில் பாதிப்பு குறைவதை அடுத்து இன்று முதல் உள்ளூர் பஸ் சேவை தொடங்க உள்ளதாக பிரஹன் மின்சாரம் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்தின் மொத்த இருக்கையின் அளவிற்கு 50% மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கண்டிப்பாக அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.