இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!

0
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் - சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் - சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் மீண்டும் அதிகளவில் உருவெடுக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது அதிகரிக்கும் பாதிப்புகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 7,591 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,15,723 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 45 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,27,799 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்தும் உள்ளது. அதனை தொடர்ந்து இதுவரை நாட்டில் 4,38,02,993 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனையடுத்து குணமடைந்தோர் விகிதம் 0.19 ஆக குறைந்துள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 24,70,330 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2,11,91,05,738 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டும் தான் சிறந்த ஆயுதம் என்று மத்திய அரசு, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

CUET PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதனால் விரைந்து செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசி வரும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!