இது என்ன பகல் கொள்ளையா இருக்கு? மதுரை விமான நிலையத்தில் அரங்கேறும் பகிர் சம்பவம்!

0
இது என்ன பகல் கொள்ளையா இருக்கு? மதுரை விமான நிலையத்தில் அரங்கேறும் பகிர் சம்பவம்!
இது என்ன பகல் கொள்ளையா இருக்கு? மதுரை விமான நிலையத்தில் அரங்கேறும் பகிர் சம்பவம்!
இது என்ன பகல் கொள்ளையா இருக்கு? மதுரை விமான நிலையத்தில் அரங்கேறும் பகிர் சம்பவம்!

தமிழகத்தில் மதுரை விமான நிலையத்திற்குள் தனியார் கார் சேவைகள் எதற்கும் அனுமதி கிடையாது. இதனால் பயணிகள் பார்க்கிங் ஏரியாவில் தான் தங்களின் வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டும். இதற்கு கட்டணத்தை தாறுமாறாக வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

விமான நிலையம்

தமிழகத்தில் அவசர காலங்களில் தொலைதூர பயணத்திற்கு விரைவில் பயணிக்க விமான போக்குவரத்தை பயணிகள் தேர்வு செய்கின்றனர். இதன் மூலமாக கால விரயத்தை தவிர்க்கலாம். ஆனாலும் விமானத்தில் பயணிப்பது என்பது சாமானிய மக்களுக்கு இப்போதும் கனவாகவே உள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் விமான நிலையத்தில் பயணிகளிடம் நூதன முறையில் கட்டணம் வசூலிப்பது என்பது அரங்கேறியுள்ளது. அதாவது விமான நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் பயணிகள் தங்களின் வாகனங்களை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு ஏர்போர்ட்க்குள் தங்களின் உடமைகளை எடுத்து நடந்து தான் செல்ல வேண்டும். இல்லையெனில் அங்குள்ள டேக்ஸியில் பயணிகள் செல்லலாம். இதற்கிடையே பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்துவதற்கு 5 நிமிடத்திற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் 5 நிமிடத்திற்கு மேல் கூடுதலாக நேரம் ஆனால் இதற்கு ரூ.60-ஐ கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இது தொடர்பான விவரங்கள் ஏதும் விமான டிக்கெட்டில் இடம்பெறுவதில்லை.

திடீரென அதிகரித்த தங்கம் விலை.. ஷாக்கில் நகைப்பிரியர்கள் – சவரன் ரூ.37,400க்கு விற்பனை!

Exams Daily Mobile App Download

இந்த விவரம் அறியாமல் செல்லும் பயணிகள் இதனை அறிந்ததும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இதனால் சாமானிய மக்கள் விமான நிலையத்தில் கால் எடுத்து வைக்க கூட முடியாது. இந்த அதீத வசூல் முறையினால் சாமானிய மக்கள் தான் பாதிப்பு அடைவார்கள். அதனால் பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி விரைவில் மதுரை விமான நிலைய நிர்வாகத்தின் நூதன வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!