அஸ்வின் & புகழ் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும் – ஹீரோயின் பேட்டி!

0
அஸ்வின் & புகழ் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும் - ஹீரோயின் பேட்டி!
அஸ்வின் & புகழ் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும் - ஹீரோயின் பேட்டி!
அஸ்வின் & புகழ் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும் – ஹீரோயின் பேட்டி!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து “என்ன சொல்ல போகிறாய்” படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இருவர் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும் என கதாநாயகி அவந்திகா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

என்ன சொல்ல போகிறாய்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலமாக பிரபலமடைந்தவர்கள் அஸ்வின் மற்றும் புகழ். கொரோனா ஊரடங்கின் போது மக்களின் ஸ்ட்ரெஸ் பாஸ்டராக இருந்தது இந்த ஷோ. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி முதல் பரிசை தட்டி சென்றார். இருந்த போதிலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் புகழின் உச்சிக்கு சென்றனர்.

ஞாயிறு ஊரடங்கு இனி கிடையாது – உத்தரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மட்டும் அல்ல பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களைப் பாராட்டிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட பாடகி ஷிவாங்கி, ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். மேலும் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷா குப்தா தற்போது ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

அதே போல அஸ்வின் மற்றும் புகழ் இணைந்து இயக்குனர் ஹரிசரண் என்பவரது இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா மற்றும் தேஜு அஷ்வினி இருவரும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அவந்திகா மிஸ்ரா கூறுகையில், படத்தில் நடிப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. புகழ் அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்தே இரண்டு பேரும் சேர்ந்தால் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. அதே மாதிரி மாத்தி மாத்தி ஒருத்தவங்களை பாராட்டிக் கொள்வார்கள். படத்துல அவங்க இருவரும் சேர்ந்து வர சீன் எல்லாம் தியேட்டர்ல விசில் சவுண்ட் பறக்கும் என தெரிவித்துள்ளார். இன்னும் சில படப்பிடிப்புகள் உள்ளது. அதன் பின்னர் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க நானும் ஆர்வமாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!