கோபியின் சுயரூபத்தை அறிந்து கொள்ளும் செழியன் – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!

0
கோபியின் சுயரூபத்தை அறிந்து கொள்ளும் செழியன் - புதிய திருப்பங்களுடன் 'பாக்கியலட்சுமி' சீரியல்!
கோபியின் சுயரூபத்தை அறிந்து கொள்ளும் செழியன் - புதிய திருப்பங்களுடன் 'பாக்கியலட்சுமி' சீரியல்!
கோபியின் சுயரூபத்தை அறிந்து கொள்ளும் செழியன் – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!

கோபியை பற்றிய உண்மைகள் அனைத்தையும் ராதிகா தற்போது அறிந்துகொண்டார். இந்நிலையில், செழியனுக்கும் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவந்து கோபியிடம் சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்ட ராதிகா முழுமையாக கோபியை விட்டு விலகப் போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்பதையே மறந்து கோபி அனைத்து உண்மைகளையும் ராதிகாவிடம் உளறி கொட்டுகிறார். அதாவது பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டி இவள் தான் என் மனைவி என கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

பாக்கியா டீச்சர் தான் உங்களது மனைவியா. இத்தனை நாட்களாக எங்களை ஏமாற்றி கொண்டிருந்தீர்களா என கேட்டு ராதிகா சண்டை போடுகிறார். பின்பு ராதிகாவின் வீட்டை விட்டு கிளம்பிய கோபி பாக்கியாவின் வீட்டிற்கு சென்று அங்கும் உளறுகிறார். எனக்கு நீங்கள் இருவர் மட்டும் தான் முக்கியம். உங்களுக்காக என் குடும்பத்தையே விட்டு வர தயாராக இருக்கிறேன் என கூறி போதையில் உளறுகிறார். இதன் பின்பு கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என பாக்கியா அழுகிறார். தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை சொல்லி அழ பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.

கதிர் முல்லையை அடுத்து வீட்டை விட்டு வெளியேறும் மீனா – புதிய திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

அங்கு ராதிகா கோபியிடம் ஏமாந்த விஷயத்தை கூறுகிறார். கோபி தான் ஏமாற்றினார் என்று வெளிப்படையாக கூறாமல் தான் ஏமாந்த விஷயத்தை பற்றி பேசுகிறார். ராதிகாவை ஏமாற்றியது கோபி தான் என்பது தெரியாமல் ராதிகாவிடம் உங்களை அவர் அந்த அளவுக்கு காதலிக்கிறார் என பாக்கியா சமாதானப்படுத்துகிறார். தற்போது செழியனுக்கும் கோபியை பற்றிய உண்மைகள் தெரியவந்து கோபியிடம் செழியன் சண்டையிடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!