தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – காரணமும், விளக்கமும்!

0
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து - காரணமும், விளக்கமும்!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து - காரணமும், விளக்கமும்!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – காரணமும், விளக்கமும்!

மீண்டுமாக பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் முழு முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் தாக்கம் காரணமாக நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

இந்தியாவில் தற்போது தான் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்கியது. இப்போது வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி – வெளியான ப்ரோமோ!

என்றாலும் கடந்த வாரத்தில் தவறுதலாக வெளியான செய்திகளின் விளக்கமாக நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவை திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு தற்போதைக்கு எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு உலக நாடுகளை மீண்டுமாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் பேரலை காரணமாக சொல்லப்படுகிறது.

கதிருக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் முல்லை – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

அப்படி எந்தெந்த நாடுகள் இந்த நோய் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது என்பதை இப்பதிவில் விரிவாக காணலாம். அந்த வகையில் முதலாவதாக ரஷ்யா நாட்டில், கொரோனா வைரஸின் தினசரி பாதிப்புகள் 34,073 ஆகவும், இறப்புகள் 1,028 ஆகவும் பதிவிடப்பட்டு வருகிறது. அதனால் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 7 வரையுள்ள நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நோய் தொற்றின் நிலைமை வித்தியாசமாக காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி – தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!

இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் உருவான சீனாவில், இரண்டு வடக்கு எல்லை பகுதிகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஷான்க்சி மாகாணத்தின் சியான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட 9 புதிய பாதிப்புகளுடன் அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.

பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 ஆயிரத்தை நெருங்கி வருவதால் இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்நாட்டின் 50 லட்ச மக்கள் தொகையில் 80% பேர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உலகிலேயே அதிக தடுப்பூசிகளை செலுத்தியிருக்கும் நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ஒவ்வொரு 1,00,000 பேரில் 400 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 10% தீபாவளி போனஸ்! அரசாணை வெளியீடு!

இங்கிலாந்து நாட்டை பொருத்தளவு, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதால் குளிர்கால நேரங்களில் நோய் தொற்று அதிகமாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here