ஓமைக்ரான் பரவலை தடுக்க ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் திடீர் உத்தரவு!

0
ஓமைக்ரான் பரவலை தடுக்க ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு அமல் - பிரதமர் திடீர் உத்தரவு!
ஓமைக்ரான் பரவலை தடுக்க ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு அமல் - பிரதமர் திடீர் உத்தரவு!
ஓமைக்ரான் பரவலை தடுக்க ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் திடீர் உத்தரவு!

உலகின் பல நாடுகளில் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கு:

உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. அதன்பின் உருமாறிய கொரோனா வகையாக ஆல்பா, பீட்டா, டெல்டா வகை தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கொரோனா தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உருமாறிய கொரோனா வகைகளின் வரிசையில் புதிதாக தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று முன்பு பரவிய டெல்டா வகை கொரோனா தொற்றைவிட வெகுவேகமாக பரவி வருகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வருண், அபிநய்? போட்டியாளர்கள் சொன்ன பதில்!

அந்த வகையில் ஓமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா உள்ளிட்ட 34க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக அதிக அளவில் பரவியுள்ள நெதர்லாந்து நாட்டில் ஏற்கனவே 4 அலைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 5வது அலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக நாளுக்கு நாள் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இந்த தடையானது வருகிற ஜனவரி 14ம் தேதி வரை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மேலும்இன்னும் பல்வேறு நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!