சென்னை : கிடுகிடுவென சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை : கிடுகிடுவென சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை : கிடுகிடுவென சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை : கிடுகிடுவென சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இதையடுத்து இன்றைய தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க மக்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர். மேலும் வெளிநாட்டவர்களும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்கின்றனர். அதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை எப்போது வாங்குவது உகந்ததாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது.

இதே போல் கடந்த சனிக்கிழமை அன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி சரிவை கண்டது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 224 குறைந்து ரூ.37,920க்கும் அத்துடன் கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740க்கும் விற்பனையானது. மேலும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்தது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.4,725-க்கு விற்பனையானது.

ஆதார் அட்டையின் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டுள்ளது. அதனால் சாமானிய மக்கள் இன்றே தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.24 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,701க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.192 குறைந்து ரூ.37,608க்கும் விற்பனையாகிறது. அத்துடன் சென்னையில் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.61.80க்கும் அத்துடன் 1 கிலோ வெள்ளி ரூ.61,800க்கும் விற்பனையாகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!