அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0
அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!
அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!
அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தங்கம் விலையானது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அதன் பின் தங்கம் விலை ஏற்றத்தை கண்ட நிலையில், இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தங்கம் விலை:

தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக பார்க்காமல் மக்கள் அதனை ஒரு முதலீட்டாக பார்த்து வருகின்றனர். அதனால் தங்கம் விலையில் எவ்வளவு மாற்றம் இருந்தாலும் நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் தங்கம் என்பது எந்த நாட்டிற்கு சென்றாலும் மதிப்பு மிக்க பொருளாக இருந்து வருகிறது. அதனால் பலருக்கு அதன் மீது ஆர்வம் இருந்து வருகிறது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

ஆரஞ்சு அலர்ட்.. தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

அதன் பின் தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 விலை உயர்ந்து ரூ.37,720 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகி வருகிறது. அந்த வகையில் தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!