நாட்டின் பொதுச் சொத்தை தனியார் மயமாக்குவதை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!

1
நாட்டின் பொதுச் சொத்தை தனியார் மயமாக்குவதை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!
நாட்டின் பொதுச் சொத்தை தனியார் மயமாக்குவதை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!
நாட்டின் பொதுச் சொத்தை தனியார் மயமாக்குவதை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!

நாட்டின் பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்குவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தனியார்மயமாக்கல்:

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்டு அதன் மூலம் நிலுவைத்தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்தது. இது போல அரசின் சில முக்கிய துறைகள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அரசு நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தாலிபான் அரசின் தேசிய கொடி, தேசிய கீதம், அரசு கோட்பாடு விரைவில் வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அரசின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு, நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

 

அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை, எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும். இதனால் மத்திய அரசின் பொதுச் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மறு பரிசீலினை செய்ய வேண்டும் என்றும், சம்பந்தபட்ட நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் இது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. தீமுக கட்சியினரின் தனியார் சொத்துக்களை அரசுடமை ஆக்கலாம்.இதற்கு யாரும் எதிர்ப்பை தெரிவிக்காமாட்டார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!