பணத்தை தவறவிட்ட முதியவர், மீட்டுக்கொடுத்த மனிதாபிமான போலீஸ் – பொதுமக்கள் வாழ்த்து!

0
பணத்தை தவறவிட்ட முதியவர், மீட்டுக்கொடுத்த மனிதாபிமான போலீஸ் - பொதுமக்கள் வாழ்த்து!
பணத்தை தவறவிட்ட முதியவர், மீட்டுக்கொடுத்த மனிதாபிமான போலீஸ் - பொதுமக்கள் வாழ்த்து!
பணத்தை தவறவிட்ட முதியவர், மீட்டுக்கொடுத்த மனிதாபிமான போலீஸ் – பொதுமக்கள் வாழ்த்து!

மதுரை மாநகரத்தில் உள்ள ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ரூ.2,700 ஐ தவற விட்ட முதியவர் ஒருவரிடம் அந்த பணத்தை திரும்ப ஒப்படைத்த சிபிசிஐடி அதிகாரி தினேஷ்குமாரின் மனிதநேயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சிபிசிஐடி அதிகாரி:

இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் அனைவரும் தங்களுக்காக, தங்களது குடும்பத்திற்காக என்று ஓடி ஓடி உழைத்து கொண்டிருப்பதனால், பக்கத்தில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது, அவர்களின் கஷ்டங்கள் என்ன என்பதை நின்று பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இதனால் மனித சமூகம் சுயநலமாக மாறிவிட்டது போல சில நேரங்களில் எண்ணங்கள் எழுகிறது. ஆனால் அதையும் தாண்டி, உலகின் ஏதோவொரு மூலையில் நடைபெறும் சில சம்பவங்கள் இந்த உலகத்தில் மனித நேயம் இன்னமும் மீதம் இருப்பதை அவ்வப்போது உணர்த்திவிட்டு செல்கிறது.

தமிழகத்தில் திடீரென நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு – காரணம் இது தான்!

அப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில், அதுவும் மதுரை மாநகரத்தில் இன்று (பிப்.10) நடைபெற்றிருக்கிறது. அதாவது மதுரை மாவட்டதில் உள்ள ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் வயதான முதியவர் ஒருவர் சுமார் ரூ.2,700 பணத்தை தவற விட்டிருக்கிறார். இந்த பணத்தை கண்டெடுத்த சிபிசிஐடி அதிகாரி தினேஷ்குமார் என்பவர் அந்த முதியவரிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்திருக்கிறார். இது நம்முடைய பார்வையில் மிகவும் சாதாரண பணமாக இருக்கலாம்.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

ஆனால் அந்த பணத்தை சம்பாதிக்க அவர் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருப்பார் என்பது, அந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட முதியவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இப்போது சிபிசிஐடி அதிகாரி, முதியவரிடம் பணத்தை ஒப்படைத்த இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காவல்துறை பற்றி மக்களிடம் நல்லதொரு எண்ணம் இல்லாத இந்த காலத்தில், சிபிசிஐடி அதிகாரி தினேஷ்குமாரின் இந்த செயல் பலரது எண்ணத்தை மாற்றும் என்றும் பலருக்கும் இது எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!