“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் அடுத்த இரண்டு ட்விஸ்ட்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் வரும் அடுத்த இரண்டு ட்விஸ்ட்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் அடுத்த இரண்டு ட்விஸ்ட்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் சென்ற வாரம் முழுவதும் கதைக்கு சம்மந்தம் இல்லாமல் காட்சிகள் காட்டப்பட்ட நிலையில், தற்போது அதெல்லாம் முடித்துவிட்டு கதையில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு பெரிய திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சென்ற வாரம் சற்று மாறுதலாக சமூக கருத்துக்களை மையமாக வைத்து புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பானது. பாரதி பணி செய்யும் மருத்துவமனையில் சக்தி என்ற குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருக்க, அதனால் கண்ணம்மாவுடன் சேர்ந்து முயற்சி செய்து பல தடைகளை தாண்டி சக்திக்கு இதயத்தை கொண்டு வந்தனர். ஆனால் சீரியலின் கதைக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

Exams Daily Mobile App Download

தற்போது மீண்டும் இயக்குனர் கதைக்குள் வந்திருக்கிறார். அதன் படி கண்ணம்மா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்க அப்போது பாரதியின் பெயர் பலகை ஒன்று கிடைக்கிறது. அதில் ஐ லவ் யூ அப்பா என எழுதி இருக்க அதை பார்த்து கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். அப்போ லக்ஷ்மிக்கு எல்லா உண்மையும் தெரியுமா? தெரிந்து கொண்டே ஏன் அப்பா பற்றி எதுவும் கேட்காமல் இருக்கிறார்? என யோசித்து கண்ணம்மா குழப்பத்தில் இருக்கிறார்.

ராதிகாவிடம் கோபி பற்றிய உண்மையை கூறிய மூர்த்தி, தனம் – மகா சங்கமத்தில் பரபரப்பான திருப்பங்கள்!

இந்நிலையில் அது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க மறுபக்கம் வெண்பாவை நாளை பெண் பார்க்க மாப்பிள்ளை வர இருப்பதாக ஷர்மிளா கூறுகிறார். அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைய அம்மாவிடம் மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்ன படித்திருக்கிறார் என கேட்கிறார். ஆனால் ஷர்மிளா நாளை அவர்கள் வந்ததும் எல்லாம் பேசலாம் என சொல்கிறார். அதனால் வெண்பாவிற்கும் ஒரு பக்கம் சிக்கல் வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here