இன்று முதல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – ஜிஎஸ்டி உயர்வு!

0
இன்று முதல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - ஜிஎஸ்டி உயர்வு!
இன்று முதல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - ஜிஎஸ்டி உயர்வு!
இன்று முதல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – ஜிஎஸ்டி உயர்வு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் GST வரி விகிதத்தில் சில புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார். மேலும், இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி

சமையல் பொருட்களில் இருந்து விலையுயர்ந்த வைர கற்கள் வரை அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட அனைத்து பால் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் எனவும், வெட்டுகத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்-சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் எனவும், தூய்மை எந்திரம், வரிசைப்படுத்தல் அல்லது தரம் பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு வகைகள், அரவை எந்திரம், பவன் சக்கி மற்றும் வெட் கிரைண்டர் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 முதல் 26 வரை தொடர்ந்து 6 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும், சோலார் வாட்டர் ஹீட்டருக்கு ஜிஎஸ்டி 12% எனவும், வங்கி காசோலைகளுக்கு ஜிஎஸ்டி 18% எனவும், வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்புத் திட்டங்கள் மற்றும் உலக உருண்டைகள் ஆகிய விளக்கப்படங்களுக்கு ஜிஎஸ்டி 12% எனவும், மருத்துவமனைகளில் ஒரு நாள் வாடகையாக ரூ. 5000 க்கும் மேல் வசூலிக்கப்படும் அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி எனவும், ஒரு நாளைக்கு ரூ.1000க்கு கீழ் வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 12% ஜிஎஸ்டி எனவும், உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12% ஜிஎஸ்டி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுடுகாடுகளுக்கான பணி ஒப்பந்தங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!