தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

0
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று கடந்த முறை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி தற்போது முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தலைமைப் பண்பு பயிற்சி:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது. தற்போது டெல்லி மாதிரி பள்ளிகள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா செப்டம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு குழுவை நிர்வகிப்பதற்கு தலைமைப்பண்பு மிகவும் அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு 2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதாவது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட 12,000 பேருக்கு தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்டு ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி என்று தெரிவிக்கப்பட்டது.

WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – 23 லட்ச கணக்குகள் முடக்கம்!

அதன்படி தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெற்று முடிவடைந்தது. அதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!