தமிழக அரசின் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை போட்டி – ஆகஸ்ட் 31 இறுதி நாள்!

0
தமிழக அரசின் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை போட்டி - ஆகஸ்ட் 31 இறுதி நாள்!
தமிழக அரசின் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை போட்டி - ஆகஸ்ட் 31 இறுதி நாள்!
தமிழக அரசின் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகை போட்டி – ஆகஸ்ட் 31 இறுதி நாள்!

தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் சிறந்த தமிழ் நூல்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு பரிசுத்தொகையையும், பாராட்டுகளையும் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன.

பரிசு போட்டி

தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி துறையின் கீழ், சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டம் தற்போது துவங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான நூல்கள், 33 வகையின் கீழ் பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள படி, குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வகையின் கீழ் ஒரு நூல் மட்டும் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு, அந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அதன் பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் கோவில்கள் திறப்பு – அமைச்சர் உறுதி!

தமிழக அரசின் இந்த சிறந்த நூல் பரிசு போட்டிக்கு புத்தகங்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரியில் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம். குறிப்பாக அஞ்சல் வழியாக அனுப்பப்படும் நூல்களை, முகவரி தெளிவாக எழுதப்பட்ட உறையில் 10 ரூ மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் – அமைச்சர் அறிவிப்பு!

இதற்கான விண்ணப்பபடிவங்கள் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்ட தகவல்களை நிரப்பி விண்ணப்பங்களை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி வரை வரவேற்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களை 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!