Tokyo Olympics 2020 Hockey – ஆண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி!

0
Tokyo Olympics 2020 Hockey - ஆண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி!
Tokyo Olympics 2020 Hockey - ஆண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி!
Tokyo Olympics 2020 Hockey – ஆண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி!

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய ஹாக்கி அணி, ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை பெற்று இந்தியர்களின் 41 ஆண்டு கால ஒலிம்பிக் கனவை நிறைவேற்றியுள்ளது.

ஹாக்கி போட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய நாள் முதற்கொண்டு இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்புகள் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இதனிடையே பல கட்ட முயற்சிகளுக்கு பின்னாக ஒரு வெள்ளி பதக்கமும், 1 வெண்கல பதக்கத்தையும் இந்திய வீரர்கள் தன் வசப்படுத்தினர்.

சரவணனன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் 14 ஆவது நாளான இன்று (ஆகஸ்ட் 5) ஆண்களுக்கான ஹாக்கி போட்டி இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் அரையிறுதி வாய்ப்பை தவற விட்ட இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதியது. அந்த வகையில் சுமார் 41 ஆண்டு கால இந்தியர்களின் கனவை நனவாக்கி ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை பெற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.

ராஜேஷ் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்தும் கோபி, ஜெனியை நினைத்து கவலைப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!

ஸ்வாரஸ்யமாக நடைபெற்ற இப்போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. இந்திய வீரரான சிம்ரன்ஜீத் சிங் ஆட்டத்தில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து இந்தியாவுக்கான வெண்கல பதக்கத்தை ஆண்கள் ஹாக்கி அணி உறுதி செய்தது. இதை தொடர்ந்து பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்துடன் நாளை (ஆகஸ்ட் 6) மோத இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!