ராதிகாவின் வீட்டை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் சென்ற தாத்தா – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பம்!

0
ராதிகாவின் வீட்டை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் சென்ற தாத்தா - பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவின் வீட்டை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் சென்ற தாத்தா - பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவின் வீட்டை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் சென்ற தாத்தா – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பம்!

பாக்கியாவின் கணவர் தான் கோபி என்கிற விஷயத்தை ராதிகாவிடம் எப்படியாவது கூறிவிட வேண்டும் என நினைத்து ராதிகா இருக்கும் வீட்டினை தேடி ராமமூர்த்தி தாத்தா அலைந்து கொண்டிருக்கிறார். தற்போது மாறு வேடத்தில் ராதிகா வீட்டை தேடும்படியான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் கோபி எப்போது தான் கையும் களவுமாக பிடிபடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவை கோபி காதலித்து கொண்டிருக்கிற விஷயம் ஏற்கனவே கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால் பாக்கியாவின் வாழ்க்கையை மனதில் நினைத்துக் கொண்டு கோபியை கண்டித்து விட்டு விடுகிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!

ராமமூர்த்தி கோபியை கண்டித்த பிறகும் கூட கோபி கொஞ்சம் கூட அடங்கவே இல்லை. ராதிகாவை திருமணம் செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறார். இதனால் கடுப்பான ராமமூர்த்தி எப்படியாவது கோபியை அடக்கியே தீரவேண்டும் என நினைத்து வீட்டில் பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு புறப்படுகிறார். ஆனால் ராதிகாவின் வீட்டிற்கு ராமமூர்த்தி செல்வதற்கு முன்பாகவே ராதிகா அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு வீட்டிற்கு சென்று விடுகிறார்.

கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி மீது விழும் பழி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

எப்படியாவது ராதிகாவின் வீட்டை கண்டுபிடித்து கோபியை குறித்தான அனைத்து உண்மைகளையும் ராதிகாவிடம் சொல்லியே தீரவேண்டும் என அமைதியாக இருக்கிறார். எப்படியும் ராதிகாவை பார்க்க பாக்கியா அவரது வீட்டிற்கு சென்று வருவார். நாம் பாக்கியாவை பின் தொடர்ந்து சென்றாலே ராதிகாவின் வீட்டை நாம் கண்டுபிடித்து விடலாம் என நினைத்து பாக்கியாவை பின்தொடர்ந்து கொண்டே செல்கிறார். கோபி குறித்தான அனைத்து உண்மைகளையும் ராதிகாவிடம் தாத்தா கூறுவாரா எனவும், ராதிகா அந்த செய்தியைக் கேட்டு கோபியை விட்டு விலகி செல்வாரா அல்லது பாக்கியாவிடம் இருந்து கோபியை பிரிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here