அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா திட்டம் – 35 லட்சம் வரை கிளைம் செய்யலாம்!

0
அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா திட்டம் - 35 லட்சம் வரை கிளைம் செய்யலாம்!
அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா திட்டம் - 35 லட்சம் வரை கிளைம் செய்யலாம்!
அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா திட்டம் – 35 லட்சம் வரை கிளைம் செய்யலாம்!

இந்திய அஞ்சலகம் மக்களுக்காக கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு என்ற திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிராம சுரக்ஷா திட்டம்:

முன்னணி சேவை நிறுவனமான அஞ்சலகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போல அஞ்சலகத்தில் பல்வேறு காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இது நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆகஸ்ட் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அதிபர் அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். ஆனால் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் இந்த பாலிசியினை எடுத்துக் கொள்ள முடியும். அதனை தொடர்ந்து தற்போது அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. 19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் – 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!

19 வயதுடைய நபர் 10 லட்சம் ரூபாய்க்கான கிராம சுரக்ஷா காப்பீடு வாங்கும் பட்சத்தில் 55 வருடங்களுக்கு மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும் எனவும், அதுவே 58 வருடங்களில் 1463 ரூபாயாக இருக்கும் எனவும், 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் 55 ஆண்டுகளில் முதிர்வு தொகையானது 31.60 லட்சமாகவும், 58 வருடத்தின் முதிர்வு தொகையானது 33.40 லட்சமாகவும், 60 ஆண்டுகளுக்கான முதிர்வு தொகையாக 34.60 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது போன்ற இன்சூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 180 5232 / 155232 என்ற எண் அல்லது http://www.postallifeinsurance.gov.in/ என்ற இணைய முகவரியை அணுகலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!