இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 அளிக்கும் அரசின் வாக்குறுதி – வெளியான அறிவிப்பு!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 உரிமைத் தொகை அளிக்க இருப்பதாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதி:
தமிழகத்தில் திமுக ஆட்சியை காற்பற்ற வேண்டும் என்பதற்காக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தது. அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் முதலில் நிறைவேற்றப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றுவரை இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக மட்டுமே அரசு தெரிவித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
IRCTC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – அனுபவசாலிகளுக்கு முன்னுரிமை!
இந்நிலையில் இதே போல் கர்நாடக மாநிலத்தில் புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் வரும் 2023 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதிய வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் மாதம் தோறும் 200 யூனிட்டுகள் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என்றும் முன்னர் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.