
தமிழகத்தில் தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி – இன்று (மார்ச் 19) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி இன்று (மார்ச் 19) முதல் துவங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஹாக்கி போட்டி
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு தவிர விளையாட்டு போட்டிகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஜூனியர் ஆண் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மகளிர் ஹாக்கி விளையாட்டு போட்டி இன்று (மார்ச் 19) தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் – பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!
பல மாநிலங்களை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர் அரியலூரை சேர்ந்த கார்த்தி சிறப்பு விருந்தினராக வர அவரை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வரவேற்றார். மேலும் பெண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதில் கர்நாடகா அணியும் பாண்டிச்சேரி அணியும் விளையாடி வருகின்றனர்