பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை – குஷியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்!

0
பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை - குஷியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்!
பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை - குஷியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்!
பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை – குஷியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்!

விஜய் டிவியில் மாபெரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்:

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மக்கள் முதல் பல பிரபலங்களை கவர்ந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் ஐந்து சீசன்களும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆறாவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலம் மதுரை முத்து மற்றும் யுடியூப் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தொகுப்பாளினி டிடி, பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த சீசனில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ப்ளீஸ் அம்மா.. வேற கல்யாணம் பண்ணாதீங்க.. திடீரென தடை போட்ட மயூரா – அதிர்ச்சியில் கோபி, ராதிகா!

Exams Daily Mobile App Download

அதாவது ஜீ தமிழ் சத்யா சீரியலில் டாப் பாய் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆயிஷா கலந்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சத்யா சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இதற்கு முன்னதாக அவர் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்த நிலையில் அதன் பின் ஜீ தமிழ் சத்யா சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருடைய வருகையால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here