ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – இதற்காக தான்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

0
ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - இதற்காக தான்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - இதற்காக தான்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – இதற்காக தான்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறையை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 7 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

கடந்த ஒரு சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் வன்முறை தீவிரமடைந்து வருவதால் அந்நகரில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அஜ்மீரின் பீவார் நகரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால், இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாற அந்நகரில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கரௌலி நகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பாக கரௌலி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ஷெகாவத் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய சூழ்நிலைகள் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு சாதாரணமாக இல்லை என்பதால் ஏப்ரல் 7 நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஊரடங்கு காலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் நுழைவு அட்டையைக் காட்டிய பிறகே தேர்வு மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எழில் படத்தை பார்க்க சென்ற குடும்பத்தினர், கடைசி வரை வராத கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இதனிடையே, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இரண்டு மணி நேரம் தளர்வு வழங்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது ‘அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இரண்டு மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் திறந்திருக்கும். மேலும் அடையாள அட்டைகளைக் காட்டிய பிறகு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக கரௌலியில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here