சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரணத் தங்க விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரணத் தங்க விலை - கவலையில் நகைப்பிரியர்கள்!
சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரணத் தங்க விலை - கவலையில் நகைப்பிரியர்கள்!
சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரணத் தங்க விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களில் குறைந்து வந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது இன்றைய தங்கத்தின் விலையை பற்றி விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. அதனால் நகைப்பிரியர்கள் தங்கத்தை எப்போது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் தற்போது பெரும்பாலானோர் தங்கத்தை வாங்க ஆர்வம் கொள்கின்றனர். அதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த ஜூலையில் தங்கத்தின் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.

மேலும் தமிழகத்தில் தங்கம் விலை இறங்கியும் அத்துடன் குறைந்தும் வந்த நிலையில் இன்று ராக்கெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 குறைந்து ரூ.38,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.4,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆக.26) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.38,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.4,830 ஆக விற்பனையாகிறது. இதையடுத்து 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,856க்கும் மற்றும் ஒரு கிராம் ரூ. 5,232க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.10 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,100 ஆக விற்பனையாகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here