இந்த 2 பேர் போதும்.. மொத்த பிக் பாஸ் வீடும் அல்லோலப்பட போகுது – வைரலாகும் போட்டியாளர்களின் தகவல்!

0
இந்த 2 பேர் போதும்.. மொத்த பிக் பாஸ் வீடும் அல்லோலப்பட போகுது - வைரலாகும் போட்டியாளர்களின் தகவல்!
இந்த 2 பேர் போதும்.. மொத்த பிக் பாஸ் வீடும் அல்லோலப்பட போகுது - வைரலாகும் போட்டியாளர்களின் தகவல்!
இந்த 2 பேர் போதும்.. மொத்த பிக் பாஸ் வீடும் அல்லோலப்பட போகுது – வைரலாகும் போட்டியாளர்களின் தகவல்!

தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்:

விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஏற்கனவே இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றிகரமான பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆறாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் காரணம் என சொல்லலாம்.

அந்த அளவிற்கு அவருடைய பேச்சு திறமைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியானது முதல் அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியான வண்ணம் இருக்கும். அந்த வகையில் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கும் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலம் மதுரை முத்து மற்றும் யுடியூப் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மல்லி, மீனா அப்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

மேலும் மதுரை முத்து கேட்ட சம்பளத்தை கொடுக்க பிக்பாஸ் குழு முடிவு செய்துள்ளதால் முதலில் அவரும் கலந்து கொள்ள சம்மதித்தார் எனவும், ஆனால் அதன் பின் ஜிபி முத்து கலந்து கொள்ள போகிறார் என தெரிந்து அவர் கலந்து கொண்டால் நான் கலந்து கொள்ளமாட்டேன் என சொன்னதாக மதுரை முத்து கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ப்ரோமோ பார்த்ததும் காடு போல செட்டப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!